தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 பாதிப்பிலிருந்து காக்குமென கூறி மக்களை கோமியம் குடிக்கவைத்த பாஜக பிரமுகர் கைது! - கொல்கத்தா ஊர்காவல் படையைச் சேர்ந்த பிந்து பிரமானிக்

கொல்கத்தா: கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து தற்காக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் எனக்கூறி பொதுமக்களைக் கோமியம் குடிக்கவைத்த பாஜக பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.

BJP activist arrested for hosting cow urine consumption event to fight COVID-19
கோவிட் - 19 பாதிப்பிலிருந்து காக்குமென கூறி மக்களை கோமியம் குடிக்க வைத்த பாஜக தலைவர் கைது!

By

Published : Mar 19, 2020, 11:26 AM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் சிறந்த தடுப்பு மருந்து இந்தத் தீர்த்தம் என்று கூறி கொல்கத்தா ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு பசுவின் கோமியம் கொடுத்த பாஜக பிரமுகர் கொல்கத்தா காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

வடக்கு கொல்கத்தாவை அடுத்துள்ள ஜோராசங்கோ பகுதியைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகர் நாராயண் சாட்டர்ஜி. இவர் கடந்த திங்களன்று கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க 'பசு வழிபாட்டு' நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் அதிசயத் தீர்த்தம் என்று கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு கோமியத்தை விநியோகித்துக் குடிக்கவைத்துள்ளார்.

அந்நிகழ்வின்போது அங்கு பணியிலிருந்த கொல்கத்தா ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பிந்து பிரமானிக் என்ற காவலரையும் நாராயண் சாட்டர்ஜி கோமியம் கொடுத்து குடிக்கவைத்துள்ளார்.

பசுவின் கோமியத்தைக் குடித்த பிந்து பிரமானிக் அடுத்த நாளே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் நாராயண் சாட்டர்ஜிக்கு எதிராகக் காவல் துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரை ஏற்று விசாரித்த காவல் துறையினர், நாராயண் சாட்டர்ஜி மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 269 (சட்டவிரோதமாக அல்லது அலட்சியமாக உயிருக்கு ஆபத்தான எந்தவொரு நோயையும் பரப்புவது), 278 (உடலுக்கு தீங்கு விளைவிப்பது),114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.

கோவிட் - 19 பாதிப்பிலிருந்து காக்குமென கூறி மக்களை கோமியம் குடிக்க வைத்த பாஜக பிரமுகர் கைது

இது குறித்து மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாளர் சயந்தன் பாசு, "நாராயண் சாட்டர்ஜி பசுவின் கோமியத்தை விநியோகித்தது உண்மைதான். ஆனால் அவர் அதை உட்கொண்ட மக்களை ஏமாற்றவில்லை. அவர் அதை விநியோகித்தபோதுகூட அது கோமியம் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்னொன்று அவர் அதனை குடித்தே ஆக வேண்டுமென யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. கோமியம் தீங்கு விளைவிக்கும் ஒன்று என நிரூபணமாகவில்லை. எனவே எந்தக் காரணமும் இல்லாமல் காவல் துறை அவரை எவ்வாறு கைதுசெய்தது. இந்தக் கைது நடவடிக்கை முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்” என விமர்சித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி ‘இது போன்ற அறிவியல்தன்மையற்ற நம்பிக்கை தவிர்க்கப்பட வேண்டும்’ என மாற்றுக்கருத்து தெரிவித்தார்.

கரோனா வைரசுக்குச் சிகிச்சையாக மாட்டு கோமியம் விநியோகம் செய்யப்பட்டதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதையும் படிங்க :கரோனா வைரஸால் மக்கள் நடமாடத் தடை: டைனோசராக மாறிய நபரின் வைரல்காணொலி

ABOUT THE AUTHOR

...view details