இது குறித்து அவர் கூறுகையில், அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகள் கட்டுமானப் பணிக்காக அரசு சார்பில் ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பணியை ரூ. 800கோடி செலவில் முடித்திருக்கக்கூடும். கெஜ்ரிவால் அரசு ரூ. 2000 கோடி செலவாகியுள்ளது என்றகிறார்கள். இந்த பணிகளில் தரமான பொருட்கள் ஏதும் உபயோகப்படுத்தவில்லை. தரமற்ற பொருட்களால் மட்டுமே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள் என்றார்.
'வகுப்பறை கட்டுமான பணியில் ரூ. 2000 கோடி ஊழல்' - பாஜக குற்றச்சாட்டு - மனோஜ் திவாரி
டெல்லி: அரசு பள்ளிகளின் வகுப்பறை கட்டுமான பணியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சேர்ந்து ரூ.2000 கோடி ஊழல் செய்திருப்பதாக டெல்லி பாஜக தலைவரும், எம்.பியுமான மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்பணியை டெண்டர் எடுத்த 34பேரும், முதலமைச்சருக்கு நெருங்கியவர்கள். அதனால் பணிகள் தரமற்றவையாக நடந்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு விஷயங்களில் இது போன்ற செயல் அவர்களின் ஊழலை அம்பலப்படுத்துகிறது என்றார்.
மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டிதற்கு மறுப்பு தெரிவித்து இருவரும் கூறுகையில், ஊழல் செய்திருப்பதை நிரூபித்தால் கைது செய்து கொள்ளுங்கள் என்றும், அப்படி ஊழல் நிருபிக்கபடவில்லை என்றால் எங்களிடம் மனோஜ் திவாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.