தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு அலுவலரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ! - எம்.எல்.ஏ

புவனேஷ்வர்: பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அரசு அலுவவரை தோப்புக்கரணம் போடவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ

By

Published : Jun 7, 2019, 2:02 PM IST

ஒடிசா மாநிலம் பாட்னாகர் தொகுதியின் எம்எல்ஏ சரோஜ் குமார், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அரசு அலுவலரை தோப்புக்கரணம் போடவைத்தச் சம்பவம் பாட்னாகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலரை தோப்புக்கரணம் போட வைத்த எம்.எல்.ஏ

இது குறித்து சரோஜ் குமார், "தொகுதியில் சாலைகள் சரிவர பராமரிப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்து அங்கு நான் சென்று பார்த்ததில் அங்குள்ள சாலைகள் தரமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்டேன். சாலைகளை சரிவர பராமரிக்காத அரசு அலுவலர்களை தண்டிக்க மக்கள் கோரிக்கைவிடுத்தனர். எனவேதான் அவரை தோப்புக்கரணம் போட வைத்தேன். ஆனால் நான் செய்ததுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details