தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கடிக்கு கடி' ஒரு தடவை கடித்த பாம்பை... இரண்டு முறை கடித்த மகாராஷ்டிரவாசி! - கசாபே தவாண்டா கிராமம்

மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்த ஆத்திரத்தில், அதைப் பிடித்து இரண்டு முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு
பாம்பு

By

Published : Jul 13, 2020, 8:42 AM IST

மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊருக்குள்‌ சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றைப் பிடிக்க முயன்றுள்ளனர். பல முறை பாம்பு பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்பவர் உதவி செய்ய வந்துள்ளார். அச்சமயத்தில் எதிர்பாராத வகையில், பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சஞ்சய், பாம்பைப் பிடித்து இரண்டு முறை கடித்துவிட்டு பைக்குள் போட்டு எடுத்துச்சென்றுள்ளார்.

அங்கிருந்து புறப்பட்ட சஞ்சய், ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல் நிலை சீராக உள்ளதாகவும், பாம்பு விஷத்தை வெளியேற்றவில்லை எனவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details