பாட்னா (பிகார்):பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் குண்டன் குமார் (20), இவர் தேர்வுக்கான நுழைவு அட்டையில், பாலிவுட் பிரபலங்கள் சன்னி லியோன்-இம்ரான் ஹாஷ்மி தான் தனது பெற்றோர் என எழுதியிருந்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது நுழைவு அட்டையின் புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விசாரணையின்போது, அந்நபர் அம்மாவட்ட மினாப்பூரில் உள்ள தன்ராஜ் மக்தோ கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் என்று தெரியவந்தது. பாலிவுட் பிரபலங்களின் பெயர்கள் மட்டுமல்லாது தனது இல்லத்தின் முகவரியாக பிகார் மாநிலத்தில் உள்ள பாலியல் தொழில் நடைபெறும் இடத்தின் முகவரியையும் அந்த மாணவன் எழுதியிருந்திருக்கிறார்.