கேரள மாநிலம் கொச்சி ஜலந்தர் முன்னாள் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல். இவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர், 2018ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ஃபிராங்கோவால் 2014-16ஆம் ஆண்டுகளில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின்பேரில் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து ஃபிராங்கோ 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு கோட்டயம் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.