தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2020, 8:33 PM IST

ETV Bharat / bharat

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் முலக்கலுக்கு நிபந்தனையுடன் பிணை

திருவனந்தபுரம் : கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு கோட்டயம் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் முலக்கலுக்கு பிணை வழங்கிய  நீதிமன்றம் !
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் முலக்கலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் !

2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் லத்தீன் கத்தோலிக்க மறைமாவட்ட ஜலந்தரின் முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிஷப் தங்களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் மூன்று கிறித்தவ சபை ஊழிய பெண்களும் குற்றஞ்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் பிஷப் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிஷப் முலக்கலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பாக கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்தவர், சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாக அறிய முடிகிறது.

இது, நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட பிணையை, கடந்த ஜூலை 1ஆம் தேதி ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் இருந்து முலக்கலை விடுவிக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பாலியல் வன்கொடுமை புரிந்த வழக்கில் முலக்கலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவரை விடுதலை செய்ய கேரள நீதிமன்றம் மறுத்தது.

இதனையடுத்து, தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிஷப் பிராங்கோ முலக்கல் மேல்முறையீடு செய்தார். அவரது மேல் முறையீடு மனுவை நேற்று முன்தினம் (ஆக.5) விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) சரத் அரவிந்த் போப்டே தலைமையிலான அமர்வு, பிஷப் பிராங்கோ முலக்கலை விடுதலை செய்ய முடியாது என்றுக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 7) கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பிஷப் முலக்கலின் பிணை மனு மீதான விசாரணை மீண்டும் வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி ஜி.கோபகுமார், முலாக்கலின் பழைய பிணைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து, நிபந்தனை பிணையை வழங்கினார். அடுத்தடுத்த விசாரணைகளில் முலக்கல் ஆஜராக வேண்டும் என்றும் மாநிலத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி நிபந்தனை பிணையை நீதிமன்றம் வழங்கியது.

ABOUT THE AUTHOR

...view details