புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று (நவ. 19) கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தியின் பிறந்தநாள்: புதுச்சேரி முதலமைச்சர் மரியாதை - Puthucheri CM
புதுச்சேரி: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி முதலமைச்சர்
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் நாராயணசாமி உள்பட அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.