தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் உயிரிழந்த காகங்களுக்கு பறவைக் காய்ச்சல்: தடுப்பு பணிகள் தீவிரம் - bird flu in jammu

ஸ்ரீநகர்: அத்வாஜன் பகுதியில் உயிரிழந்த காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Bird flu
பறவைக் காய்ச்சல்

By

Published : Feb 1, 2021, 6:02 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று (பிப்.1) மதியம் சில காகங்கள் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக அம்மாவட்ட நிர்வாகம் ட்விட் செய்துள்ளது.

அதில், ’அத்வாஜனில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் மற்றும் பீர்பாக் பகுதியில் உள்ள வெள்ள வடிநீர் கால்வாய்க்கு அருகில் சில காகங்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன. அவை மீட்கப்பட்டு போபால் ஆய்வகங்களுக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. அனைத்து காகங்களின் மாதிரிகளிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதனைச் சுற்றியுள்ள 10 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகள் கண்காணிப்பு பகுதிகளாக அறிவிக்கப்படுள்ளன. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:செங்கோட்டை பகுதியில் உயிரிழந்த காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி

ABOUT THE AUTHOR

...view details