தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்கா பதவியேற்பு - பிமல் ஜூல்கா

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்காவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

bimal-julka-
bimal-julka-

By

Published : Mar 6, 2020, 2:16 PM IST

சுதிர் பார்கவா ஓய்வுக்குப் பிறகு மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான குழு முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலரான பிமல் ஜூல்காவை ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்தது.

அதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்காவிற்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஹைதராபாத்தில் மிகப்பெரிய தியான மையத்தைத் திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details