தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்: மோடி ட்வீட் - Latest BJP News'

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான மசோதாக்கள் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

bills-will-add-impetus-to-the-efforts-to-double-income-of-farmers-pm-modi-on-farm-bill
bills-will-add-impetus-to-the-efforts-to-double-income-of-farmers-pm-modi-on-farm-bill

By

Published : Sep 20, 2020, 10:50 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் வேளாண் துறை தொடர்பாக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்கட்சியினர் மத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடன் கொத்தடிமை ஆக்கும் முயற்சிதான் இந்த மசோதாக்கள் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

அதில், '' பல தசாப்தங்களாக இந்தியாவில் விவசாயிகள் இடைத்தரகர்களால் கொடுமைகளுக்கு உள்ளாகினர். இதுபோன்ற கொடுமைகளிலிருந்து விவசாயிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் விடுவிக்கிறது. விவசாயிகளும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிதான் இந்த நடவடிக்கை. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதனை உறுதி செய்ய முடியும்.

நமது நாட்டில் உழைக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக புதிய தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால், விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை எளிதாக அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான்.

நான் முன்பு சொன்னதை மீண்டும் சொல்கிறேன். எம்.எஸ்.பி அமைப்பு நிச்சயம் இருக்கும். விவசாயிகளிடமிருந்து அரசின் கொள்முதலும் தொடரும். விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள்...!

ABOUT THE AUTHOR

...view details