கோவிட்-19 பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு பல நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர சிறப்பு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.
இந்தியாவில் சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அரசு, இதுவரை தெளிவான பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், சர்வதேச விமானப் பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பேசிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "கோவிட்-19 பரவலுக்கு முன் எவ்வளவு விமானங்கள் இயக்கப்பட்டனவோ, அந்த எண்ணிக்கையை நாம் அடையும் வரை, இருதரப்பு கட்டுப்பாடுகள் என்பது தொடரும்.
இந்த இரு தரப்பு ஒப்பந்தங்கள் என்பது குறிப்பிட்ட அளவு மக்களை அழைத்துவர உதவும்; ஆனால் பல வரையறுக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளுடன்! ஏனென்றால், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இன்னும் பல கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து விதித்துவருகின்றன" என்றார்.