ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெலுங்குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலா திலீப் குமார். இவர் ஊரில் உள்ள விவசாயிகள் மின்சாரமில்லாமல் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, தன்னால் முடிந்த அளவு விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என எண்ணி, ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். அதன் விளைவாக பைக்கில் மோட்டாரைப் பொருத்தி இயக்கும்விதமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.