சமீபத்தில் பிகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மகா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் 16 தொகுதிகளில் வெற்றிபெற்றன. இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில், “பிகாரில் பாஜக வெற்றிபெற்றதற்கும் மோடி அரசு கரோனாவையும் பொருளாதாரத்தையும் கையாண்டதற்கும் சம்பந்தமில்லை. அந்த ஒரு மாநிலத்தில் வெற்றிபெற்றதால் மட்டுமே மோடி அரசு திறம்பட செயல்படுகிறது என்பது அர்த்தமில்லை.