தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘அடக்கம் செய்ய பணம் வேணும்’ : இறந்தவரின் உடலை வங்கிக்கு எடுத்துச் சென்ற கிராமவாசிகள்! - பீகார் வங்கி

பாட்னா: பிகார் கிராமவாசிகள் இறந்தவரின் உடலை வங்கிக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கை செய்வதற்கு அவரது கணக்கிலிருந்து பணத்தை தருமாறு கோரியுள்ளனர்.

இறந்தவரின் உடலை வங்கிக்கு எடுத்துச் சென்ற கிராமவாசிகள்!
இறந்தவரின் உடலை வங்கிக்கு எடுத்துச் சென்ற கிராமவாசிகள்!

By

Published : Jan 6, 2021, 12:44 PM IST

பிகார் மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் மகேஷ் யாதவ். 55 வயதான இவருக்கு சொந்த பந்தம் எனச் சொல்லிக் கொள்ள யாருமில்லை. தற்போது மகேஷ் உயிரிழந்துள்ளதையடுத்து, அவரின் இறுதிச் சடங்கை செய்ய கிராமவாசிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் இறுதிச் சடங்கை செய்ய போதிய பணம் இல்லாததால், அவரின் உடலை கனரா வங்கிக்கு எடுத்துச் சென்று அவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துத் தருமாறு கிராமவாசிகள் கேட்டுள்ளனர். அப்போது அலுவலக சிக்கல்களை மேற்கோள் காட்டி பணத்தைத் தர முடியாது என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

இறந்தவரின் உடலை வங்கிக்கு எடுத்துச் சென்ற கிராமவாசிகள்!

இதனையடுத்து மகேஷ் யாதவின் உடலை வங்கியின் உள்ளே விட்டு வந்த கிராமவாசிகள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கிராமவாசிகள், வங்கி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராமவாசிகளிடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி மேலாளர் சந்தீப் குமார் கூறுகையில், "இறந்த மகேஷ் யாதவின் கணக்கில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் உள்ளது. ஆனால் வங்கி நியமனத்தில், அவரது வாரிசுகள் யார் என்று குறிப்பிடப்படவில்லை” என்றார்.

இதையும் படிங்க...மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கங்குலி!

ABOUT THE AUTHOR

...view details