கரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கரோனா குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் காணொலி, குறும்படம் மூலமாக அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கரோனா என்றும் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.