பிகார் மாநிலத்தில், 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 12 தேர்தல் பேரணிகளை நடத்தவுள்ளார். இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் பிகார் பொறுப்பாளருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியதாவது, "பிரதமர் மோடி பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காக 12 தேர்தல் பேரணிகளை நடத்தவுள்ளார்.
பிகார் தேர்தல் - தீவிர வாக்குசேரிப்பில் பிரதமர் நரேந்திர மோடி!
பாட்னா: பிகார் மாநிலம் சசாரம், கயா, பாகல்பூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று நடைபெறும் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிக்கிறார்.
அக்டோபர் 23 இல் சசாரம், கயா, பாகல்பூரிலும், அக்டோபர் 28 இல் தர்பங்கா, முசாபர்பூர், பாட்னாவிலும் பேரணிகளை நடத்துகிறார். நவம்பர் 3 ஆம் தேதி சாப்ரா, கிழக்கு சம்பரன் ,சமஸ்திபூர், மேற்கு சம்பரன், சஹர்சா மற்றும் அராரியா ஆகிய இடங்களில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கை பாஜகவிற்கு மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பயனளிக்கும்" என்றார் ஃபட்னாவிஸ்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முறையே 121-122 இடங்களில் போட்டியிட பாஜகவும், ஜேடியுவும் ஒப்புக் கொண்டன. இப்புரிந்துணர்வின் படி 122 இடங்களைக் கொண்ட ஜே.டி.யு, அதன் ஒதுக்கீட்டில் இருந்து ஜிதின் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு இடங்களை வழங்கியுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3, 7 என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது.