தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: முதன்முறையாக தபால் வாக்கு செலுத்தும் மூத்த குடிமக்கள்

டெல்லி: பிகார் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்), மாற்றுத்திறனாளிகள் என சுமார் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், தபால் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

பீகார் தேர்தல்: முதன்முறையாக தபால் வாக்கு செலுத்தும் மூத்த குடிமக்கள்
பீகார் தேர்தல்: முதன்முறையாக தபால் வாக்கு செலுத்தும் மூத்த குடிமக்கள்

By

Published : Oct 13, 2020, 8:21 AM IST

பிகார் 2020 சட்டப்பேரவைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று செப்டம்பர் 25அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டமாக, பிகார் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு அக்டோபர் 28அன்று நடைபெற உள்ளது.

பிகார் தேர்தலில் முதல்முறையாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே தபால் மூலம் வாக்குப்பதிவு செய்யும் செயல்முறை வசதியை ஏற்படுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்த காணொலி பதிவுசெய்யப்பட்டு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும்.

பிகாரில் முதல்கட்டமாக நடைபெற்றவுள்ள 71 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பூத் நிலை அலுவலர்கள், இதுபோன்ற நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை அணுகியுள்ளனர்.

முன்னதாக, தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 01 வரை பிகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தினர் விஜயம் செய்தபோது, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்குப்பதிவு நடைமுறை குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக கருத்துக் கணிப்பு அமைப்புத் தெரிவித்துள்ளது.

பிகாரில் அடுத்தடுத்த இரண்டு கட்டத் தேர்தல்களிலும், மற்ற அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் இடைத்தேர்தல்களிலும், இந்த நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் இந்த செயல்முறை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக அடுத்த இரண்டு கட்டங்களில் பிகாரில் உள்ள சுமார் 12 லட்சம் வாக்காளர்களின் வீடுகளை தேர்தல் அலுவலர்கள் பார்வையிடுவார்கள் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details