பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடைவதால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிகார் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவு! - பிகார் தேர்தல்
பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது.
சப்ரா, சமஸ்திபுரா, மோதிஹரி, பாகா ஆகிய நான்கு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பேசினார். மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி ஆகியோரும் தேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரித்தனர். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
பாட்னா சாகிப், ரகோபூர், ஹசன்பூர் உள்ளிட்ட 94 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாவோயிஸ்ட் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.