பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி தொடரும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் சிங் நமது ஈடிவி பாரத்திடம் கூறினார்.
இது தொடர்பாக அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக-நிதிஷ்) ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டுமானால் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிகாரில் மகா கூட்டணி தொடர்கிறது” என்றார்.
மேலும் பிரபல அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள் சந்தித்தார்கள் என்பதையும் அவர் மறுத்தார்.
இது குறித்து அவர், “பிகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணி தொடரும். இந்தக் கூட்டணியில் உபேந்திரா குஷ்வாகா (ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி), முகேஷ் சஹ்னி (விஹாசில் இன்ஸான் கட்சி), ஜித்தன் ராம் மஞ்சி (இந்துஸ்தான் ஆவாம் மோர்சா) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும்" என்றார்.
பிகாரில் மகா கூட்டணி தொடரும் - காங்கிரஸ் இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நிதிஷ் குமாருடன் மகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஆட்சித் தொடர்ந்த நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமாரிடமிருந்து பெற முயற்சித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டார்.
இதையும் படிங்க :சிகரம் தொட்ட சிறுமிக்கு நரேந்திர மோடி வாழ்த்து