தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் விதிகளை மீறிய பிகார் வேளாண்துறை அமைச்சர் - பிகார் தேர்தல் செய்திகள்

பாட்னா: பாஜகவின் தலைவரும், பிகாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Bihar Minister Prem Kumar violates poll code Model Code of Conduct Case against Prem Kumar Bihar Elections 2020 Bihar Polls MCC Violation BJP Minister பிகார் வேளாண்துறை அமைச்சர் பிகார் அமைச்சர் பிரேம்குமார் பிகார் தேர்தல் செய்திகள் bihar agri minister
பிகார் வேளாண்துறை அமைச்சர் பிரேம்குமார்

By

Published : Oct 28, 2020, 2:04 PM IST

பாஜகவின் தலைவரும், பிகாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனது வாக்கைப் பதிவுசெய்ய வாக்குச்சாவடி வந்த அவர், பாஜகவின் சின்னம் பொறித்த முகமூடியை அணிந்திருந்தார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்தச்செயல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக தனக்கு தோன்றவில்லை என பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த தேர்தல் ஆணையம், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கயா மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.

முதல்கட்டத் தேர்தலில் 952 ஆண்வேட்பாளர்களும் 114 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details