தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓடும் ரயிலில் குழந்தையைப் பெற்ற புலம்பெயர்ந்த பெண்! - Bihar: Migrant woman gives birth to child on train

பாட்னா(பிகார்): ஓடும் ரயிலில் பயணிகளின் உதவியுடன் புலம்பெயர்ந்த பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ரயிலில் பிறந்த குழந்தை
ரயிலில் பிறந்த குழந்தை

By

Published : May 20, 2020, 2:05 PM IST

குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து, பிகார் மாநிலம் சீதாமர்ஹிக்கு நிறைமாத கர்ப்பிணி ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர்.

இது குறித்து தனக்பூர் ரயில் நிலையத்திலிருந்து மருத்துவர் கூறும்போது, 'ரயிலில் உள்ள பயணிகள் பிரசவத்திற்கு உதவியுள்ளனர். ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி எடுத்தோம். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க:'சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களின் தேவையை மாநில அரசு புரிந்து நடக்கவேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details