பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் மொசாஹிடிபூரில் குடிப்பழக்கக்கிற்கு அடிமையான ஒருவர், சூதாட்டத்தில் மோகம் கொண்டுள்ளார். பணத்தை இழந்துகொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் தனது மனைவியைப் பந்தயம் வைத்துள்ளார்.
சூதாட்ட தோல்வியால் மனைவி அனுப்பிவைப்பு - பிகாரில் அரங்கேறிய கொடுமை - தமிழ் லெடஸ்ட் செய்திகள்
பாட்னா: சூதாட்டத்தில் மனைவியை வைத்து தோற்றதால், வெற்றிபெற்றவர்களுடன் செல்லுமாறு கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார்
பந்தயத்தில் தோற்றதால், மனைவியை வெற்றியாளர்களுடன் செல்லுமாறு வற்புறுத்தி அனுப்பியுள்ளார். அனைவரும் அப்பெண்ணுடன் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதியாக, அங்கிருந்து தப்பித்து தாயாரின் வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். உடனடியாக, காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.