பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா மாவட்ட அரசு மருத்துவமனையில் மகனின் பிணத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தந்தையே தூக்கிச் சென்றார்.
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகனின் சடலத்தை தோளில் சுமந்த தந்தை! - Patna
பாட்னா: அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகனின் சடலத்தை தந்தையே தோளில் சுமந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ்
இது குறித்து மருத்துவமனை டீன் யோகேந்திர சிங் கூறும்போது, ‘மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாதது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
நாடு முழுவதும் தொழில்நுட்பம் வெகு விரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகனின் சடலத்தை தந்தையே தோளில் சுமந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.