தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 பாதிப்புகளை மறைக்கும் பிகார் அரசு - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு - பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பாட்னா: பிகார் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளை குறைத்து காட்டும் செயலில் அம்மாநில அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வினி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tej Yadav
Tej Yadav

By

Published : Aug 13, 2020, 5:03 PM IST

பிகாரில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - பாஜக தலைமையிலான கூட்டணி அரசு தற்போது ஆட்சி செய்துவருகிறது. இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரைவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

கரோனா பாதிப்பு, குடிபெயர் தொழிலாளர்கள் விவகாரம், வெள்ள பாதிப்பு ஆகியவை அம்மாநிலத்தின் முக்கிய சிக்கலாக உள்ள நிலையில், இந்த விவகாரங்களில் பிகாரின் செயல்பாடு குறித்து முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாளம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறது.

கோவிட் பாதிப்பு குறித்து பிகார் எதிர்க்கட்சி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வினி யாதவ் பேசுகையில், கரோனா தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்கும் வேலையை நிதீஷ் குமார் மேற்கொண்டுவருகிறார். முன்பெல்லாம் 10 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளும்போது 3 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகின.

பரிசோதனை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தபின்னர் ரேபிட் டெஸ்ட் மூலம் பரிசோதனையை அதிகப்படுத்திய பின்னரும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கையை அரசு குறைவாகக் காட்டிவருவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே, முறையான முடிவுகளை வழங்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை பிகார் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:கோவிட் - 19: 70 சதவிகித இளைஞர்களின் கல்வி பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details