பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலங்கள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கனமழை; 50 பேர் பலி! - worsened
பாட்னா: பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பிகாரில் உள்ள அரேரியா, கிஷன்கஞ்ச், சுபால், தர்பங்கா, சிவார், சீதாமரி, கிழக்கு சம்பாரன், மதுபானி, முசாபர்பூர், பூர்னியா, சஹர்சா மாவட்டங்கள் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், உயிரியல் பூங்காவில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கனமழைக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.