பாட்னா: பிகாரின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. குறிப்பாக சிவான் உள்ளிட்ட மாநிலத்தின் 16 வடமாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று (ஆக.6) மட்டும் வெள்ளத்துக்கு இருவர் உயிர் இழந்தனர். இதனால் உயிரிழப்பு 21 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் தர்பங்கா (7), முசாபர்பூர் (6), மேற்கு சம்பரான் (4) மற்றும் சிவான் (2) பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதேபோல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளும் 1165இல் இருந்து 1185ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 69 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், கடந்த சில தினங்களாக பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கிய 22 பேரை போலீஸ்!