பாட்னா:நேபாளத்தில் உற்பத்தியாகி பிகார் பகுதிகளில் ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமான ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ள தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் முசாபர்பூர் பகுதியில் ஆறு பேரும், மேற்கு சம்பரான் பகுதியில் நான்கு பேரும், சரண் மற்றும் சிவான் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் உயிரிழந்திருந்தனர்.