பிகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் அக்கியுட் என்சிபாலிட்டிஸ் சிண்ரோம் (Acute Encephalitis Syndrome) எனப்படும் மூளைக் காய்ச்சல் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சல் குறிப்பாகக் குழந்தைகள், முதியோர்களைத் தாக்கிவருகிறது.
பிகாரில் மூளைக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 96ஆக உயர்வு! - பீகாரில் மூளைக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 96ஆக உயர்வு
பாட்னா: பிகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக 96 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Bihar Encephalitis death toll rises
இந்தக்காய்ச்சலால் தலைவலி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் குளூகோசின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.
முசாஃபர்நகரில் மட்டும் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதேபோல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவிவருகிறது.