தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல் - 1066 வேட்பாளர்களின் விதியை நிர்ணயிக்கவுள்ள 2.14 வாக்காளர்கள்! - பிகார் வாக்குப்பதிவு

பாட்னா : பிகார் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

bihar-electio -71-seats-go-to-polls-in-first-phase
bihar-electio -71-seats-go-to-polls-in-first-phase

By

Published : Oct 28, 2020, 9:10 AM IST

பிகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், போட்டியிடும் ஆயிரத்து 66 வேட்பாளர்களின் தலைவிதியை, சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் முடிவு செய்கிறார்கள்.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்பதால் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வாக்களிக்கும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஒரு வாக்குச் சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கையை ஆயிரத்து 600லிருந்து ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதைதவிர, வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுத்திகரிப்பு, தேர்தல் அலுவலர்கள் முகக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது, உடல் வெப்ப ஸ்கேனர், சானிடைசர், ஆகியவை இருப்பது உறுதி செய்யப்படும்.

தேர்தல் ஆணையம் வழங்கிய தரவுகளின்படி, மொத்தம் உள்ள 2.14 கோடி வாக்காளர்களில், 1.01 கோடி பெண்கள், 599 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆயிரத்து 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 952 ஆண்களும், 114 பெண்களும் உள்ளனர்.

அதிகபட்சமாக கயா டவுன் சட்டப்பேரவைத் தொகுதியில் 27 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக கட்டோரியா தொகுதியில் 5 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஜே.டி.யு கட்சி 71 இடங்களில் 35 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக (29) இடங்களிலும் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ள மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 42 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் களத்தில் உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ஸ்ரேயாசி சிங்(27), பாஜக சார்பில் ஜமுயி சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில், மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆறு அமைச்சர்கள் பிரேம் குமார் (கயா டவுன்), விஜய் குமார் சின்ஹா ​​(லக்கிசராய்), ராம் நாராயண் மண்டல் (பாங்கா), கிருஷ்ணானந்தன் பிரசாத் வர்மா (ஜெஹனாபாத்), ஜெய்குமார் சிங் (தினாரா) மற்றும் சந்தோஷ் குமார் நிரலா (ராஜ்பூர்) ஆகிய ஆறு அமைச்சர்கள் களம் காண்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details