பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக மும்பை சென்ற வினய் திவாரி உள்ளிட்ட பீகார் காவலர்களை மும்பை காவல்துறையினர் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
பீகார் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம்: முதலமைச்சர் நிதீஷ் குமார் கருத்து - மும்பையில் விசாரணைக்காக சென்ற பீகார் காவலர்கள் கட்டாய தனிமைப்படுத்தல்
பாட்னா: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பையில் விசாரணைக்காக சென்ற பீகார் காவலர்களை மும்பை காவல் துறையினர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியது தொடர்பாக காவல் துறைத் தலைமை இயக்குநர் மகாராஷ்டிர காவல்துறையினரிடம் பேசுவார் என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவிததுள்ளார்.
![பீகார் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம்: முதலமைச்சர் நிதீஷ் குமார் கருத்து bihar-dgp-will-speak-to-maharashtra-police-on-patna-sp-being-quarantined-in-mumbai-nitish-kumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:46:33:1596460593-8275828-download.jpg)
bihar-dgp-will-speak-to-maharashtra-police-on-patna-sp-being-quarantined-in-mumbai-nitish-kumar
மும்பை வருவதற்கு முன்னர் காவலர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு முறையான பரிமரிப்பு வழங்கப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் குப்தேஷ்வர் பாண்டே மகாராஷ்டிர காவல்துறையினர் பேசுவார் என்றும், இது அரசியல் விஷயமல்ல எனவும் கூறியுள்ளார்.