பிகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் அக்கியுட் என்சிபாலிட்டிஸ் சிண்ரோம் (Acute Encephalitis Syndrome) எனப்படும் மூளைக் காய்ச்சல் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சல் குறிப்பாகக் குழந்தைகள், முதியோர்களைத் தாக்கிவருகிறது. இந்தக் காய்ச்சலால் தலைவலி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் குளூகோசின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.
மூளைக் காய்ச்சலால் 107 பேர் பலி! - 107 பேர் பலி
பாட்னா: பிகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
bihar
இந்நிலையில், முசாஃபர்நகரில் மட்டும் இதுவரை மூளை காய்ச்சலால் 107 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.