பிகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு அசுர பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் கட்சியான ராட்ரீய ஜனதா தளம் விளங்குகிறது.
இங்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆளும் கட்சி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சி மறுமுனையிலும் தேர்தலை சந்திக்கின்றன. இம்முறை மாயாவதி யாருக்கும் ஆதரவு அளிக்காமல் மூன்றாவது அணியாக களம் காண்கிறார்.