பீஹார் மாநிலம் லக்ஷிசாராய் மாவட்டத்தில் சனியா காட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது சின்னனாய் கிராமத்தின் அருகே உள்ள பிபரியா பகுதியில் படகு சென்றபோது, எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பீஹாரில் படகு கவிழ்ந்து விபத்து; பயணிகள் கவலைகிடம்! - லக்ஷிசாராய்
லக்ஷிசாராய்: சனியா காட் பகுதியில் உள்ள படகில் பயணம் செய்தபோது எதிர்பாரா விதமாக கவிழ்ந்து விபத்துள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படகு கவிழ்ந்து விபத்து
இதனையடுத்து, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் மூழ்கியவர்களை தேடப்பட்டு வருகிறார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
படகில் பயணம் செய்தவர்களில் 40க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.