தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகின் மிக நீளமான மனித சங்கிலி!

பாட்னா: சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Human Chain
Human Chain

By

Published : Jan 19, 2020, 3:42 PM IST

வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்டவைக்கு எதிராக நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கி.மீ நீள மனித சங்கிலி அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மனித சங்கிலி

காந்தி மைதானத்தில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள மனித சங்கிலிதான் உலகின் மிக நீளமான மனித சங்கிலியாக இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முதன்முதலில் 2017ஆம் ஆண்டு பிகார் அரசு சார்பாக மதுவிலக்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. நிதிஷ் குமாரின் பதவி காலம் இந்தாண்டு அக்டோபருடன் முடிவடைவதால், மக்களின் ஆதரவைப் பெற இம்மாதிரியான யுத்திகளை நிதிஷ் கையாள்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அதிரடியில் இறங்க இருக்கும் மகாராஷ்டிரா?

ABOUT THE AUTHOR

...view details