பிகார் மாநிலம் பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
பிகாரில் பேருந்து விபத்து; 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு - Migrant Workers
![பிகாரில் பேருந்து விபத்து; 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு bihar-at-least-9-labourers-](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7256546-thumbnail-3x2-l.jpg)
09:49 May 19
பாட்னா: பாகல்பூரில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இரும்புக் குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி, காரிக் காவல் நிலைய எல்லையில் உள்ள அம்போ ஃசவுக் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் லாரியிலிருந்த இரும்புக் குழாய்கள் தொழிலாளர்களின் மீது விழுந்துள்ளன. இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:மங்களூருவில் ரயில் தடம் புரண்டு விபத்து