இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது ஒரு புறம் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலையில், மறுபுறம் கரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த 100 பாஜக நிர்வாகிகளின் உமிழ்நீர் மாதிரிகள் கரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டன.
அதில், பிகார் மாநில பாஜக பொதுச் செயலாளர் நாகேந்திர நாத், மாநில துணைத் தலைவர்கள் ராஜேஷ் வர்மா, ராதா மோகன் சர்மா என குறைந்தபட்சம் 75 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 75 பாஜக தலைவர்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநில பாஜக கலக்கத்தில் உள்ளது.