தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேகமாகப் பரவும் கரோனா: ம.பி.யில் பாதிப்பு 3,785 - இந்தூரில் 1935 பேர் கரோனாவால் பாதிப்பு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 785ஆக அதிகரித்துள்ளது.

big-spike-in-coronavirus-cases-in-mp
big-spike-in-coronavirus-cases-in-mp

By

Published : May 12, 2020, 10:25 AM IST

நாட்டில் கரோனா தீநுண்மி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விழுக்காடு இரட்டிப்பாகியுள்ளது.

ஏப்ரல் 25ஆம் தேதிவரை ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்படிருந்தனர். நேற்று புதிதாக 171 பேர் பாதிக்கப்பட்டதால், அம்மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு மூன்றாயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.

இதில், இந்தூரில் அதிகபட்சமாக ஆயிரத்து 935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாநிலத்தில் உள்ள 52 மாவட்டங்களில் 41இல் கரோனா தீநுண்மி பரவியுள்ளது.

இதுவரை போபாலில் 774 பேரும், உஜ்ஜைனில் 237 பேரும், ஜபல்பூரில் 133 பேரும், கார்கோனில் 89 பேரும், தார் மாவட்டத்தில் 79 பேரும், கந்த்வாவில் 59 பேரும், மாண்டசவுரில் 51 பேரும், திவாஸில் 48 பேரும், ஹொசங்காபாத்தில் 37 பேரும், நீமுச்சில் 27 பேரும், பர்வானியில் 26 பேரும், ரத்லமில் 23 பேரும், மொரேனாவில் 22 பேரும், குவாலிடரில் 26 பேரும், விதிஷா, அகர் மால்வாவில் தலா 13 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாயிரத்து 785 பேரில் ஆயிரத்து 574 பேர் நல்ல நிலையில் இருப்பதாகவும், 243 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 747 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அகமதாபாத்தில் 6,000 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details