குஜராத் கக்ராப்பூர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தின் மூன்றாவது அணு உலை கட்டுமானப் பணிகள் 2010ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மின் உற்பத்திக்கு முந்தைய கிரிட்டிகாலிட்டி(Criticality) எனப்படும் தயார் நிலையை அணு உலை தற்போது அடைந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பணிபுரிந்துவரும் அணு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய அணுசக்தி வரலாற்றில் இது முக்கியமான நாள் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கக்ராபூர் அணு மின் நிலையத்தின் மூன்றாவது உலை தயார் நிலையை அடைந்துள்ளது. இப்பெரும் சாதனையை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகளுக்கு நாடு தலை வணங்குகிறது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆத்ம நிர்பார் பாரதத்தை அடைய புதிய இந்தியா முன்நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
விஞ்ஞானிகளை வாழ்த்திய மோடி, சாதனைகளை எதிர்காலத்தில் புரிய இது உந்துசக்தியாக விளங்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூவர்ணக் கொடியை பற்றி தெரிந்து கொள்வோம்