தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் : வாழ்த்துக் கூறிய அமிதாப் - கரோனா அச்சுறுத்தல்

டெல்லி : ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவிற்கு மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

big-b-congratulates-india-for-jointly-winning-fide-chess-olympiad
big-b-congratulates-india-for-jointly-winning-fide-chess-olympiad

By

Published : Aug 31, 2020, 7:40 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முதன்முறையாக எஃப்ஐடிஇ (FIDE) செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று ரஷ்யா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில், இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற நிஹால் சாரின், திவ்யா தேஷ்முக் ஆகியோரின் இணையம் துண்டிக்கப்பட்டதால் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரஷ்யா போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியா தனது தரப்பிலிருந்து சில தகவல்தளை அளித்ததையடுத்து இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய சாம்பியன்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "செஸ் ஒலிம்பியாட்...ரஷ்யாவும் இந்தியாவும் கூட்டு சாம்பியன்கள்! வாழ்த்துக்கள் இந்திய அணி! ஜெய் ஹிந்த்! என்னுடைய இந்தியா எப்போதும் வெற்றி பெறட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details