மே மாத தொடக்கத்தில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், எதிர்காலத்தில் "சைக்கிள் ஓட்டுதலுக்கான புதிய பொற்காலமாக இருக்க வேண்டும்" என்று கூறினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரபலமான சாலையில் உங்களை காணமுடியும் என்ற ஹீரோ சைக்கிள் பரப்புரையை நினைவில் கொள்ளுங்கள்: இது சைக்கிள்களை மீண்டும் சாலையில் கொண்டு வருவதையும், தனி சைக்கிள் ஓட்டுதல் பாதைகளின் தேவையையும் குறிக்கிறதா? நிச்சயமாக, கோவிட் -19 க்கு பிந்தைய காலகட்டத்தில், இருசக்கர வாகனங்களுக்கு உலகம் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் மாறி வருவதற்கான அறிகுறிகள் இப்போது உள்ளன.
தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய இந்த காலகட்டத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை விட மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு சைக்கிளில் செல்வதை விரும்புவதில் ஆச்சரியமில்லை. உதாரணமாக, ஐரோப்பிய நாடாளுமன்றம், பொது போக்குவரத்தைத் தவிர்க்குமாறு ஊழியர்களை வலியுறுத்துவதற்கு “நடந்து அல்லது சைக்கிளில் அல்லது இல்லாத பட்சத்தில், உங்கள் தனிப்பட்ட காரை பயன்படுத்துங்கள்” என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனிமனித விலகலை கடைப்பிடிக்க சைக்கிள் ஓட்டுதலைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. சைக்கிள் ஓட்டுதல் என்பது சந்தேகத்திற்கிடமின்றி மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளைக் கொண்ட போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். கொடிய காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட கடந்த காலங்களில் சைக்கிள் ஓட்டுவது ஊக்குவிக்கப்பட்டது. இருப்பினும், மக்கள் பயணத்திற்கான நேரத்தையும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காமல் இருப்பதை பார்க்கும்போது, போக்குவரத்தின் முறை இப்போது ஓரளவுக்கு மாறக்கூடும்.
தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் போதுமான சமூக இடைவெளியை பராமரிக்க, டெல்லி மெட்ரோவுக்கு தற்போதுள்ளதை விட 6 மடங்கு சேவைகள் தேவைப்படும், மும்பையின் புறநகர் ரயில்வேக்கு 14-16 மடங்கு விரிவாக்கம் தேவை, பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 24,000 பேருந்துகள் கூடுதலாக தேவை. பொது போக்குவரத்து திறன் குறைக்கப்படுவதால், குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ள சாலைகளுக்கு, சரியான மாற்று தேவைப்படுகிறது. மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்கக்கூடும்.
சைக்கிள் ஓட்டுவது சிறந்தது தான், ஆனால் மிகவும் எளிதானது அல்ல. மிதிவண்டிகளின் பாதுகாப்பாக மற்றும் சுலபமாக ஓட்டுவதற்கு , மோட்டார் சைக்கிள்கள் ஓடும் பாதையில் இருந்து சைக்கிள் ஓட்டுவதற்கு என்று தனிப்பட்ட அல்லது நடைபாதைகளுடன் பகிர்ந்து கொள்ளத்தக்க விரிவான சைக்கிள் வழித்தடம் தேவை என்பது தெளிவாகிறது.
டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் விரிவான உள்-நகர சைக்கிள்-பாதை வழித்தடங்கள் உள்ளன. அன்றாடம் சைக்கிளில் வருவதற்காக கடைகள், வீட்டுவசதி, நிலையங்கள், பள்ளிகள், பணியிடங்களை இணைக்க நெதர்லாந்தில் உள்ள Fietspad எனப்படும் சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 உண்மையில் சாலையில் காணமுடியும் என்ற உலகளாவிய முயற்சியைத் தூண்டியுள்ளது. நியூயார்க் தனது சாலைவழியில் 40 மைல் சைக்கிள் பாதைகளைச் சேர்த்துள்ளது, போகோடா ஒரே இரவில் சைக்கிள்களுக்கு 76 கி.மீ. பாதை அமைத்தது, ஆக்லாந்து 17 கி.மீ தற்காலிக சைக்கிள் பாதைகளை உருவாக்க தெருவில் கார் நிறுத்துமிடத்தை அகற்றியது, மிலன் 35 கி.மீ தெருக்களை பாதசாரி மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு முன்னுரிமையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது, பாரிஸ் 650 கி.மீ உடனடி சைக்கிள் வழிகளை உருவாக்குகிறது, பிரிட்டன் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி ஆகியவற்றுக்கு 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது, மேலும் உலகத்தில் உள்ள பல நகரங்கள் தற்காலிக சைக்கிள் ஓட்டும் பாதைகளை அமைத்துள்ளன அல்லது தற்போதுள்ளவற்றை விரிவுபடுத்தியுள்ளன