புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையிலும், மிதிவண்டி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புதுச்சேரி மாநிலம் கடற்கரை சாலையில் மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரியில் மிதிவண்டி குறித்து விழிப்புணர்வுப் பேரணி! - மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி: மிதிவண்டியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
Bicycle awareness rally in Pondicherry!
இப்பேரணியை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லஷ்மி நாராயணன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியானது கடற்கரை சாலை பூங்காவில் இருந்து புறப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளின் வழியாக மீண்டும் தொடக்கப் பகுதிக்கே வந்தடைந்தது. மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.