வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடி புகுந்தவர்களில் இஸ்லாமியரை தவிர மற்றவருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 8-ம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் அஸ்ஸாம் வந்த மோடிக்கு எதிராக கறுப்பு கொடியும் காண்பிக்கப்பட்டது.
பாரத ரத்னாவை திருப்பி தர அசாம் பாடகர் குடும்பம் முடிவு - அஸ்ஸாம்
கவுகாத்தி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பாரத ரத்னா விருதை திருப்பி தர அசாம் பாடகர் பூபன் ஹஸாரிகாவின் குடும்பம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர், கவிஞர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட பூபன் ஹஸாரிகாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க சமீபத்தில் முடிவு செய்தது. ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினர் விருதை திருப்பி தர முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் டெஸ் ஹஸாரிகா கூறுகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கும் இந்த சூழலில் நான் எனது தந்தைக்காக மத்திய அரசின் பாரத ரத்னாவை பெற்றுக்கொள்ள மாட்டேன். எனது தந்தை இருந்திருந்தாலும் விருதை பெற்றிருக்கமாட்டார். நான் எப்போது அஸ்ஸாம் மக்கள் பக்கமே நிற்பேன் என்றார்.