1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு தங்களுக்கு விடியவே விடியாது என்று அம்மக்கள் நிச்சயமாக கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் இரவு, போபாலில் உள்ள பூச்சிக் கொல்லி ஆலையிலிருந்து விஷவாயு வெளியேறியது.
சிறிது நேரத்தில் காற்றில் கலந்த விஷத்தை மூச்சாக்கி குடித்த பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெரியோர்கள் வரை, கொத்து கொத்தாக செத்து விழுந்தனர். அந்த ஆலையிலிருந்து குறைந்தது 30 டன் விஷ வாயு வெளியேறியது.
இதற்கு 15 ஆயிரத்து 274 பேர் இரையானார்கள். 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்நாள் முழுவதும் நிரந்தரப் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த கொடிய விஷக் கசிவு பிற்கால தலைமுறையினரைக் கூட விடவில்லை. தற்போதும் குழந்தைகளுக்குப் பாதிப்பு உள்ளது. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு ஆபத்து அணு என்றால், போபாலின் துயரத்துக்குக் காரணம் யூனியன் கார்பைடு என்ற விஷம்.
இதையும் படிங்க:போபால் விஷவாயுக்கசிவு எதிர்ப்புப் போராளி காலமானார்!
இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால், இந்த விஷக்கசிவில் சிக்கி வாழ்விழந்த மக்களுக்கு அன்று உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இன்று வரை அவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. ஆம், இந்த துயரம் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். ஆகவே, மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுமட்டுமின்றி தொழிற்சாலையின் அசுத்தமான இடத்தை சுத்தம் செய்ய, ஐக்கிய நாடுகள் சபைத் தயாராக இருந்தது. ஆனாலும் ஐ.நா. முன்மொழிவு குறித்து மையமோ மாநில அரசுகளோ இதுவரை கவனம் செலுத்தவில்லை.
"ஆறு ஆண்டுகளாக மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதை அனுமதிக்க கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆனது. அதாவது 1992 முதல் 2004 வரை இறுதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டை அதிகரிக்க அவர்கள் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இது 2010இல் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முரண்பாடாக இந்த ஆண்டுகளில் தகுந்த இழப்பீட்டுத் தொகைக்காகப் போராடிய பிறகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வரை சரியான சிகிச்சை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. இன்றும் அவர்கள் மாத்திரை உட்கொள்ளும் நிலை உள்ளது. இது தொடர்ந்தால் போபால் விஷவாயுத் தாக்குதல் நடந்த பகுதி, இந்தியாவின் ஹிரோஷிமாவாக மாறிவிடும். ஆம், அங்கு வாழும் உயிர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது.
இதையும் படிங்க: மறுக்கப்பட்ட கல்வி, நீதிமன்றத்தை நாடிய 3 வயது பெண் குழந்தை!