தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீமா கோரேகான் : டெல்டும்டேவை கைது செய்ய இடைக்காலத் தடையை நீட்டித்த உச்ச நீதிமன்றம்!

டெல்லி: பீமா கோரேகான் வழக்கில் குடிமைச் சமூக செயல்பாட்டாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா ஆகிய இருவரை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடையை மார்ச் 16ஆம் தேதிவரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bhima Koregaon: SC extends interim protection from arrest granted to Navlakha, Teltumbde
பீமா கோரேகான் : டெல்டும்டேவை கைது செய்ய இடைகாலத் தடையை நீட்டித்த உச்ச நீதிமன்றம்!

By

Published : Mar 6, 2020, 5:21 PM IST

பீமா கோரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன் பிணையை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நிராகரித்தது. இதனையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு, இந்த மேல்முறையீட்டு வழக்கு வரும் மார்ச் 16ஆம் தேதி விசாரணைக்கு வருமென அறியமுடிகிறது.

பீமா கோரேகான் : டெல்டும்டேவை கைது செய்ய இடைகாலத் தடையை நீட்டித்த உச்ச நீதிமன்றம்!

பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நவ்லகா, டெல்டும்டே ஆகியோருக்கு முன் பிணை மறுத்த மும்பை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஏதுவாக கைது செய்யப்படுவதற்கு இடைக்கால பாதுகாப்பை நான்கு வார காலத்திற்கு நீட்டித்திருந்தது கவனிக்கத்தக்கதாகும்.

செயற்பாட்டாளர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால பிணை வரும் மார்ச் 14 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிடும் என்பதால் உச்ச நீதிமன்றம் அதனை நீட்டிக்க வேண்டும் என்று அமர்வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : பாஜகவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை: ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details