ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி புனேவிலுள்ள பீமா கோரிகான் கிராமத்திலுள்ள பீமா கோரிகான் நினைவுச் சின்னத்துக்கு மகராஷ்டிராவிலுள்ள மகர்கள் மரியாதை செலுத்துவர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
2018 ஜனவரி 1ஆம் தேதி பீமா கோரிகான் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற கார்கள், நபர்கள் மீது காவிக்கொடி ஏந்திய கும்பல் ஒன்று கற்களை வீசித்தாக்கியதால் கலவரம் வெடித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், இக்கலவரத்திற்கு காரணமானவர்கள் என இந்திய அரசு சமூக செயற்பாட்டாளர்கள் சிலரைக் கைது செய்தது.
அதில், ஒருவரான சுதா பரத்வாஜ் நீரிழிவு நோயாலும், இஸ்மிக் நோயாலும் அவதிப்பட்டுவந்தார். இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை இயல்பாக இருக்கிறது என்று சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.