தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீமா கோரிகன் வழக்கின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி -  எச்சூரி - பீமா கோரிகன் கலவரம்

மும்பை : பீமா கோரிகன் வழக்கின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் எச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

sitaram yechury
sitaram yechury

By

Published : Dec 5, 2019, 12:16 PM IST

1888ஆம் ஆண்டு பூனே நகருக்கருகே உள்ள பீமா கோரிகன் என்ற பகுதியில் மாராத்தியர்கள்-கிழக்கு இந்திய கம்பெனுக்கிடையே போர் நடைபெற்றது. இதில், ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு போரிட்ட கிழக்கு இந்திய கம்பெனி வெற்றிகண்டது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பீமா கோரிகன் பகுதியில் பட்டியலின மக்கள் 'எல்கர் பரிஷத்' என்னும் மாநாட்டை நடத்திவருகின்றனர்.

கடந்தாண்டு நடந்த மாநாட்டில், நூற்றுக்கணக்கான பட்டியின மக்கள் கூடியிருந்தனர். அப்போது, அவர்கள் மீது ஒரு கும்பல் கல்யெறியத் தொடங்கியது. இதையடுத்து, இருதரப்பினருக்குமிடையே கலவரம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, வரவர ராவ், அருண் ஃபெரேரா, வெர்னான் கோன்ஸால்வஸ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட பட்டியலின சமூக ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறவேண்டும் என தேசியவாத கட்சி எம்.எல்.ஏக்கள் புதிதாக பெறுப்பேற்றுள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

'நிகழ்ச்சியில் கை கொடுக்க மறந்துட்டேன்' - சிறுமியின் இல்லத்திற்கே சென்ற அபுதாபி இளவரசர்!

இந்தச் சூழலில், பீமா கோரிகன் வழக்கில் பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சிதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், இதற்குப் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக குற்றம்சாட்டிய எச்சூரி, இது பட்டியலின மக்களுக்கு எதிரான செயல் என விமர்சித்துள்ளார்.

தற்போது அமைந்துள்ள சிவ சேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு நீதிபதி லோயா மறைவு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details