மகாகவி பாரதியார் மீது கொண்ட பற்றால் கனக சுப்புரத்தினம் என்ற தன்பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இவர் இருண்ட வீடு, குயில் பாடல்கள், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு உள்ளிட்ட பல நுால்களை எழுதியுள்ளார்.
மேலும், புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்...
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! உள்ளிட்ட பல பாடல் வரிகள் மூலம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதிாசன் நினைவு தினம் இவரின் நினைவு நாளான இன்று புதுச்சேரி அரசுக் கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் இணைந்து புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் வாழ்ந்த வீடு, நினைவு அருங்காட்சியகம் மையத்தில் வைத்து அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு செயலர் தேவா தேவேஷ்சிங் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன், பாவேந்தர் பாரதிதாசன் பேரன் பாரதி மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி குரு முனுசாமி குழுவினர் கலந்துகொண்டு பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை பாடி இசைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பாவேந்தர் பாரதிதிாசன் நினைவு தினம்