தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது? - Mahatma Gandhi

டெல்லி: பாரத ரத்னா விருதைவிட மகாத்மா காந்தி உயர்ந்தவர் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Gandhi
Gandhi

By

Published : Jan 17, 2020, 8:33 PM IST

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் பி. ஆர். கவாய், சூர்யா காந்த் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது எஸ். ஏ. பாப்டே, காந்தியடிகள்தான் தேச பிதா, அவர் மேல் மக்கள் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர். அவர் விருதுக்கு அப்பாற்பட்டவர் என கருத்து தெரிவித்தார்.

உங்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால், அரசிடம் இதுகுறித்து கோரிக்கை வையுங்கள் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க: 'ராகுல் காந்தி சி.ஏ.ஏ. குறித்து 10 வாக்கியமாவது பேச வேண்டும்' - ஜே.பி. நட்டா

ABOUT THE AUTHOR

...view details