அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.அதன்படி நீண்ட காலம் பணியில் இருக்கும் ஊழியர்கள் தாமாக முன்வந்து விருப்ப ஓய்வெடுக்கும் பட்சத்தில் சிறப்பான சலுகைகளுடன் கூடிய பணிக்கொடை அளிப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டத்துக்குத் தகுதியாக உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்களில் சுமார் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு கொண்டுவந்த இத்திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் இன்று நடத்திவருகிறது. விருப்ப ஓய்வை நோக்கி ஊழியர்களைத் தள்ளுவது தவறான அணுகுமுறை என்றும், விருப்ப ஓய்வுக்குப் பல ஊழியர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டி இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறது ஊழியர் சங்கம்.